தமிழ்நாடு மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, நேர்காணல்களை ஏற்பாடு செய்து ஆட்சேர்ப்பு செய்யும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 24) நடத்தப்பட உள்ளது. நாளைய தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் "வாழ்த்துக்களை" தெரிவித்துக் கொள்கிறோம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (ஜூலை 24) கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையர் போன்ற பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுகள் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த டிஎன்பிஎஸ்சி (Tamil Nadu Public Service Commission) குரூப்-4 தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
காலியாக உள்ள 7301 பணியிடங்களுக்கு 21,85 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். நாளை தேர்வு எழுதுபவர்களில் பெண்கள் 12,67,457 மற்றும் ஆண்கள் 9,35,354 பேர் பங்கேற்கிறார்கள். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள், 316 தாலுகா மையங்களில் உள்ள 7,689 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுதுபவர்களையும், தேர்வு மையங்களையும் கண்காணிக்க 534 பறக்கும் படைகள் பணிகள் ஈடுபட உள்ளனர்.
இந்த குரூப்-4 தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கேற்ப செயல்திறனின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
TNPSC Group 4 Candidates: இந்த ஆவணங்கள் மறக்காமல் எடுத்து செல்லுங்கள்
- அனுமதி அட்டை
- அடையாளச் சான்று
- புகைப்படங்கள்
மேலும் படிக்க: