News

Tuesday, 29 March 2022 08:23 PM , by: T. Vigneshwaran

TNPSC group 4

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் ஜூலை 24-ம் தேதி நடைபெறும் எனவும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை டி என் பி எஸ் சி தலைவர் பாலச்சந்திரன் சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.

அதிக அளவில் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் குரூப் 4 தேர்வு 2019 க்கு பிறகு நடைபெற உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், நில அளவையர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாலச்சந்திரன், கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வுகள் நடைபெறாவிட்டாலும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் இருந்த காலிப்பணியிடங்களை ரிசர்வ் லிஸ்ட்டில் உள்ளவர்கள் மூலம் பூர்த்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். ஜுலை 24-ம் தேதி தேர்வு நடைபெறும் காலை தேர்வு 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரத்திற்கு தேர்வு நடைபெறும்.

மொத்தம் 7,382 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. அதில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவு மூலம் பூர்த்தி செய்யப்படும். 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சான்றிதழ் சரிப்பார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.

தேர்வு நடைபெறும் பணியிட விவரங்கள்:-

  • இளநிலை உதவியாளர் பிணையற்றது - 3593
  • இளநிலை உதவியாளர் பிணை - 88
  • வரித்தண்டாளர் - 50
  • தட்டச்சர் - 2108
  • சுருக்கெழுத்து தட்டச்சர் - 1024
  • பண்டக காப்பாளர் ( ஊட்டி தமிழ்நாடு இல்லம்) - 1
  • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
  • இளநிலை உதவியாளர் - 64வரித்தண்டளர் - 49
  • தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் -7
  • தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
  • இளநிலை உதவியாளர் - 43
  • முதல்முறையாக வாரியத்திற்கு 163 இடங்கள் நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்படுகிறது.

81 இடங்கள் விளையாட்டு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி விண்ணப்பத்தில் முஸ்லீம்கள் குறித்த கேள்வி சர்ச்சையானது குறித்து பதிலளித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன், வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வாரியாக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மதம் மாறிய முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு உள்ளதா இல்லையா என்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு முடிவு செய்யப்படும்.

2019-ல் நடந்த முறைகேடுகள் காரணமாக 100-க்கும் மேற்பட்ட தேர்வர்களின் தேர்வை ரத்து செய்தோம். நடந்த தவறுகள் சார்பாக யார் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுத்து விட்டோம். 2019 க்கு முன்னர் சென்டர் விண்ணப்பிப்பவர்களால் தேர்வு செய்யப்படும். தற்போது சென்டர்களை டி என் பி எஸ் சி தான் தேர்வு செய்யும். தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள்கள் பாதிகாப்பான முறையில் கொண்டுவந்து திருத்தம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் படிக்க

பழைய பென்ஷன் திட்டம் அறிவிப்பு- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)