(TNPSC) டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய சிலபஸை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடதக்கது. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படவுள்ளது. அவை,
இளநிலை உதவியாளர் | Junior Assistant |
தட்டச்சர் | Typist |
சுருக்கெழுத்து தட்டச்சர் | Steno-Typist |
கிராம நிர்வாக அலுவலர் | Village Administrative Officer |
வரித் தண்டலர் | Bill Collector |
நில அளவர் | Field Surveyor |
வரைவாளர் | Draftsman |
தமிழ்நாடு CM பெல்லோஷிப் 2022-24: விண்ணப்பப் படிவம், தகுதி! அறிந்திடுங்கள்!
இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிக அளவில் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
தேர்வு முறை (Selection method):
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ் எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வாகும். இதில் 100 வினாக்கள் கேட்கப்படுகிறது. இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. முன்னர் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது தமிழ் மொழிப்பாடம் மட்டுமே இருக்கிறது. இதனை தேர்வர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தப்பட்ச மதிப்பெண்ணை பெற வேண்டியது அவசியமாகும்.
கல்லணை ஆற்றில் நீர் திறப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!
இரண்டாவது கட்டமாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்து இருக்கும். இருப்பினும், புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள், இதில் அடங்கும். எனவே, இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
மேலும், சிலபஸில் செய்யப்பட்டியிருக்கும் மாற்றத்தை காண, முதலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் காணவும். லிங்க் இதோ, https://www.tnpsc.gov.in/
அடுத்ததாக மெனு பாரில் Recruitment என்பதை கிளிக் செய்து, அதில் சிலபஸ் (Syllabus) என்பதில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் அதாவது (Revised Syllabus) என்பதை கிளிக் செய்ய வேண்டும். நேரடி சிலபஸ் டவுன்லோட் லிங்க்-ம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ்த்தாள் இனி இவர்களுக்கு இல்லை: புதிய அறிவிப்பு!
பின்னர் புதிய பக்கத்திற்குச் செல்லும், அங்கு குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட சிலபஸ் (Revised Syllabus) என்பதை கிளிக் செய்ய வேண்டும், புதிய சிலபஸை டவுன்லோடு செய்துக் கொள்ளுங்கள். முழுவிவரமும் அறியலாம்.
மேலும் படிக்க:
ரேஷன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை விநியோகம் - அமைச்சர் சக்கரபாணி