நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 September, 2022 5:18 PM IST
TNPSC Group IV: Free Coaching for Written Exam! Detail inside

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சிகள் மையங்களான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற TNPSC Group IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்ப படிவம் ஆகியன www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் மேற்படி இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை 14 செப்டம்பர் 2022 வரை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையங்களில் நேரடியாக அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-24621475 மற்றும் 044-24621909 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

மேலும் இப்பயிற்சிக்கு, தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் மற்றும் சேர்க்கைக் குறித்த நாள் ஆகியவற்றை மேற்படி இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று. தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும். அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேற்படி தேர்விற்கு வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.

காத்திருப்பு தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான நாட்கள் காலியிடங்களுக்கேற்ப www.civilservicecoaching.com இணையவழியாக தெரிவிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் 21 செப்டம்பர் 2022 முதல் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க:

வேளாண் துறைக்கு, ரூ.125.28 கோடி மதிப்பீட்டிலான கட்டடங்கள்!

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

English Summary: TNPSC Group IV: Free Coaching for Written Exam! Detail inside
Published on: 06 September 2022, 05:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now