தமிழகத்தில் குரூப் 2 போட்டித் தேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, அனைவரும் ஹால் டிக்கெட்டுக்காக காத்திருக்கின்றனர். காத்திருப்பு முடிவடைந்தது, குரூப்-2 தேர்விற்கு விண்ணப்பித்தோர், தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு தேர்வுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது.
திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. மேலும், அரசு வேலை தேடுபவர்களும், இந்த தேர்வுகளுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு 2022, மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது குறிப்பிடதக்கது.
பதிவிறக்கம் எவ்வாறு செய்வது?
விண்ணப்பதாரர்கள் அனைவரும், தமிழ்நாடு தேர்வாணயத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
அதில் பதிவு செயப்பட்ட எண் மற்றும் கடவுச் சொல் உள்ளிடவும்.
பின்னர் ஹால்டிக்கெட் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
அதில் கேட்கப்பட்ட விவரங்களை உள்ளிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு, பதிவை மேலும் படிக்கவும்.
TNPSC கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வரும் மே 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் tnpscexams.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: