News

Friday, 10 June 2022 04:37 PM , by: R. Balakrishnan

TNPSC

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் 19-ம் தேதி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு நடைபெற உள்ளது.

ஹால் டிக்கெட் (Hall Ticket)

இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெடை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இல் வெளியிட்டுள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை மேலே குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் படிக்க

பொறியியல் படிப்பிற்கு ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)