இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 January, 2022 5:18 PM IST
TNPSC: Job Notice.. Last Date January 23, 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதாவது (Tamil Nadu Public Service Commission) ஆனது தமிழ்நாடு தொழில்துறை துணைப் பணியில் வேதியியலாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனவரி 23, 2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்-தொழில் மற்றும் வணிகத் துறையில் மொத்தம் 3 வேதியியலாளர் பணியிடங்களுக்கு TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு-ஜூலை 1, 2021 தேதிப்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்-ரூ. 37,700 முதல் 1,19,500 வரை வழங்கப்படும்.

கல்வி தகுதி- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் வேதியியல் அல்லது வேதியியல் தொழில்நுட்பம் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு அல்லது பயன்பாட்டு வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியல் ஆராய்ச்சியில் அனுபவம் இருக்க வேண்டும்.

இந்த கல்வி தகுதி மற்றும் வயது வரம்பை பூர்த்தி செய்வோர் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை- தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படும், அதாவது, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு-க்கான தேதி:
தேர்வு மார்ச் 19, 2022 அன்று இரண்டு அமர்வுகளாக நடைபெறும்: தாள் 1- காலை 9.30மணி முதல் மதியம் 12.30மணி வரையும், தாள் 2- 2.00 மணி முதல் மாலை 5.00மணி வரையும் நடைபெறும்.
நேர்காணலுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள், உடல் தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு எச்சரிக்கை! குளிர்காலத்தில் வாழையில் இதை கவனிக்கவும்

5 நாட்களில் குணமாகிறதா ஒமிக்ரான்? ஆனால் எச்சரிக்கை மிக முக்கியம்!

English Summary: TNPSC: Job Notice.. Last Date January 23, 2022
Published on: 04 January 2022, 05:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now