
தமிழ்நாடு வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (06.09.2022) முடிவடைகிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உரிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, வனசார பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மூன்று தாள்கள் உள்ளடக்கிய எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும். முதல் தாளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது பாடங்களும், இரண்டாவது, மூன்றாவது தாள்களில் விருப்பப் பாடங்கள் இடம்பெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 3 முதல் 12ம் தேதி வரை.
தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு (Walking Test), வாய்மொழித் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
கல்வித் தகுதி: வனவியல் அல்லது அதற்கு இணையான கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை ஆகிய ஏதேனும் ஒரு படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150
ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: