News

Wednesday, 14 September 2022 06:59 PM , by: T. Vigneshwaran

TNPSC

டிஎன்பிஎஸ்சி தற்போது தமிழக சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறையில் காலியாக உள்ள சிறை அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 8
 
பணியின் பெயர் :  சிறை அலுவலர்

பணியின் விவரம்: 

சிறை அலுவலர் (ஆண்கள்) - 6
 
சிறை அலுவலர் (பெண்கள்) - 2
 
விண்ணப்பிக்கும் தேதி: 
 
இப்பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: 
 
www.tnpsc.gov.in,www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
கல்வித் தகுதி: 
 
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில்‌ பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. குற்றவியல்‌ மற்றும்‌ குற்றவியல்‌ நீதி நிர்வாகம்‌ மற்றும்‌ சமூகப்‌ பணியில்‌ முதுகலைப்‌ பட்டம்‌ பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வயது வரம்பு: 
 
விண்ணப்பதாரர் வயது 32க்குள் இருக்க வேண்டும்.  மேலும் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும்‌ அனைத்து வகுப்புகளையும்‌ சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயவரம்பு இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
சம்பள விவரம்: 
 
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்‌ சம்பளமாக ரூ.38,900 - ரூ.1,35,100 வரை வழங்கப்படும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: 
 
இப்பணிக்கு எழுத்துத்‌ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடவுள்ளனர். டிசம்பர் 22 ஆம் தேதி முற்பகல்‌ 9.30 முதல்‌ பிற்பகல்‌ 12.30 வரை தாள்‌-1க்கான தேர்வும்‌, பிற்பகல்‌ 2.30 முதல்‌ 5.30 வரை தாள்‌-2க்கான தேர்வும்‌ நடைபெறுகிறது.
மேலும் படிக்க:

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)