பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 14 August, 2022 5:04 PM IST
TNUSRB - Job Vacancy

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 3,552 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனின் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க நாளை (ஆகஸ்ட் 15) கடைசி நாள்.

பணி விவரம் (Job Details)

அறிவிப்பின் படி, 2,180 காவல்துறையில் உள்ள பணியிடங்களும், விசாரணைப் பிரிவில் 1,091 பணியிடங்களும், சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பிரிவில் 161 காலிப் பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவில் 120 காலிப் பணியிடங்களும் தகுதி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? (How to apply)

தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./ என்ற வலைதளபக்கத்திற்கு செல்லவும்.

ஹோம்பேஜில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கான பொதுப்பணி நியமனம் - 2022 என்பதை க்ளிக் செய்யவும்.

இதில் சுய விவரங்களை பூர்த்தி செய்து முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.

ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

முழு விவரங்களை பூர்த்தி செய்தவுடன் உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்தும் வைத்துகொள்ளலாம்.

கல்வித் தகுதி (Educational Qualification)

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தம் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள், தமிழ் மொழிவழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

வயது வரம்பு (Age Limit)

விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவு எனில் 18 முதல் 26 வயதுக்கு மிகாவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவுகளில் 32 வயதிற்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

தேர்வு முறை (Exam Type)

எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, எவ்வித குற்ற வழக்குகளும் இல்லாதவர் என்ற நற்சான்று விசாரணை, ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

மேலும் தகவலுக்கு.. https://tnusrb.tn.gov.in/pdfs/notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க

வங்கி கடனை மற்றொரு வங்கிக்கு வேண்டுமா? எளிய வழிமுறை இதோ!

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் முதல் புதிய பென்ஷன் திட்டம்!

English Summary: TNUSRB: Jobs in Tamil Nadu Uniformed Staff Selection Board! Apply now!
Published on: 14 August 2022, 04:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now