படித்த வஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் ஜி.கே. மணி வேண்டுகிறேன் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க., சார்பில் அரசியல் பயிலரங்கம் அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பயிலரங்கம் செயல்படவில்லை. இந்நிலையில், புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட பயிலரங்கத்தை கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று காலை திறந்து வைத்தார்.
பயிலரங்கம் (Training Centre)
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மூலம் 2002ல் பயிலரங்கம் துவங்கப்பட்டது. நாட்டில் எங்கும் இல்லாத ஒரு அமைப்பு தான் இந்த அரசியல் பயிலரங்கம். காவலர், செவிலியர், தையல் கலைஞர்கள் கூட பயிற்சி எடுக்காமல் வேலை செய்ய முடியாது. அந்த அடிப்படையில் அரசாங்கத்தை உருவாக்குகிற அரசியல் கட்சிக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் பா.ம.க., பயிலரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிலரங்கம் மூலம் ஒரு லட்சத்து 754 பேர் பயிற்சி பெற்றனர். இதில், பெண்கள் மட்டும் 25 ஆயிரத்திற்கு மேல் பயிற்சி பெற்றுள்ளனர். அரசியலை புனரமைப்பதற்காக தற்போது பயிலரங்கம் புனரமைக்கப்பட்டுள்ளது.
வரும் 30ம் தேதி பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற உள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அன்புமணி எம்.பி., பயிற்சி வகுப்பை துவக்கி வைக்க உள்ளார். இந்த ஆட்சியில் ஏறக்குறைய 9 மாதங்கள் வரை கொரோனா தொற்றால் ஓடி விட்டது. இந்த நோயை குறைப்பதற்கே அரசு செயல்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மக்களுக்கும், அரசுக்கும் வருவாய் இல்லை.
பாசன திட்டம் (Irrigation Scheme)
இன்னும் மக்களுடைய எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது. குறிப்பாக காவிரி தண்ணீர் வீணாக போகிறது. அதை தடுத்து நிறுத்தி மழைக்காலங்களில் கடலுக்குள் வீணாகச் செல்லும் உபரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும். பாலாறு, தென்பெண்ணையாறு, வைகை ஆகிவற்றின் மூலம் பாசன திட்டங்களுக்கான மாஸ்டர் பிளான் போட வேண்டும். அடிப்படை தொழிலான வேளாண்மையை மேம்படுத்த பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
வேளாண் தொழிற்சாலை (Agro-Factory)
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலாக உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறினார். இதன் மூலம், விவசாயம் அழியாமல் காக்கப்படுவதோடு, இளைஞர்களும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாகும்.
மேலும் படிக்க
வேளாண் ஏற்றுமதி முனையம்: பல லட்சம் கிலோ விளை பொருட்களை சேமிக்கலாம்!