- தமிழக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
- அணையை தூய்மைப்படுத்த மிதக்கும் பொக்லைன் அறிமுகம்
- விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கும் திருப்பதி தேவஸ்தானம்
- டெல்டா விவசாயிகளுக்கு அமைச்சர் MRK பன்னீர் செல்வம் தகவல்
விரிவான செய்திகள்
தமிழக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடரும் மழையினால், தமிழக அணைகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரிக்கிறது. காவேரி, பில்லூர்-பவானி, அமராவதி உட்பட. ஒருசில அணைகள் நிரம்பவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அறுவடை பணிகளை தீவிரப்படுத்தலாம். ஆனால் மலையோர பகுதி/ காற்று மறைவு பகுதி விவசாயிகள் மட்டும் சற்று கவனத்துடன் அறுவடையை மேற்க்கொள்ளலாம்.
அணையை தூய்மைப்படுத்த மிதக்கும் பொக்லைன் அறிமுகம்
ஆங்கிலேயர் காலத்தில் நீர்மின் உற்பத்திக்காவும் அருவங்காட்டில் உள்ள மத்திய அரசு கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலைக்கான தண்ணீர் தேவயைப் பூர்த்தி செய்ய காட்டேரி பகுதியில் இரண்டு அணைகள் கட்டப்பட்டன. தற்போது, மலை மாவட்டமான நீலகிரியில் அதிக எண்ணிக்கையிலான அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிகளவு நீர்மின் உற்பத்தி நிலையங்களை கொண்ட மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள காட்டேரி அணையைத் தூய்மைப்படுத்த மாவட்டத்தில் முதல் முறையாக மிதக்கும் பொக்லைன் இயந்திரத்தை அறிமுகம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த இயந்திரம், நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் வகையிலும் வெள்ளத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கும் திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி திருமலை கோவிலில் மக்களுக்கு வழங்கப்படும் உணவானது இயற்கையான முறையில் இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து 12 வகையான உணவுப் பொருட்களை வாங்க முடிவு செய்துள்ளது. மாநில விவசாயிகள் ஆணையம் மற்றும் மார்க்ஃபெட் அதிகாரிகள் திருப்பதி தேவஸ்தானத்தில் கலந்தாய்வு செய்தனர். அந்த கலந்தாய்வில், மக்களுக்கு பிரசாதம் செய்து வழங்க பயன்படுத்தப்படும் 12 வகையான உணவுப் பொருட்களை தவணை முறையில் பல முறை வாங்கி கொள்வதற்கான ஒப்பந்தமானது, ஆந்திர மாநில உழவர் அமைப்பு மற்றும் மார்க்ஃபெட் நிறுவனத்துடனும் முடிவானது.
Kalakshetra அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2022: சம்பளம் 1லட்சம்!
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி ரசாயன உரங்கள் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் தகவல்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி அனைத்து ரசாயன உரங்களும் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிடும்போது, சாகுபடி செலவு அதிமாவதோடு, பூச்சி, நோய் தாக்குதலும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும் என்பதால், விவசாயிகள் பயிரின் தேவைக்கேற்ப உரம் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாபம் ஈட்டி தரும் வெண்டைக்காய் சாகுபடி: அசத்தும் தஞ்சாவூர் விவசாயி
சிக்குன்குனியாவை தடுக்கும் கொசு உருவாக்கம்
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர் புதுச்சேரியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் புதிய வகை கொசுக்களை உருவாக்கியுள்ளனர். ஆண் கொசுக்களுடன் புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது உருவாகும் கொசுவில் வைரஸ் இருக்காது. 4 ஆண்டு ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்ட Wolbachina கொசுக்களை அரசின் ஒப்புதலுக்கு பிறகு வெளியே விட முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கார பணிக்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கல்வி முறையில் மாற்றம்
ஆங்கிலேயர் உருவாக்கிய வேலைக்கார கல்வி முறையில் இன்னும் ஏராளமான மாற்றங்களுக்கான தேவைகள் உள்ளன. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அகில இந்திய கல்வி மாநாட்டை பல்கலைக் கழக மானியக் குழு UGC, வாரணாசி பனாரஸ் இந்து பலகலைக் கழகத்துடன் இணைந்து ஒன்றிய கல்வி அமைச்சககம் ஏற்பாடு செய்திருந்தது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடக்கும் இந்த 3 நாள் அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமைழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: