News

Friday, 10 December 2021 11:19 AM , by: T. Vigneshwaran

Gold Price Today

கடந்த வாரம் உயர்ந்த தங்கத்தின் விலை, இன்று குரைன்டர்த்துள்ளது. இந்த வாரம் மட்டும் நான்கு முகூர்த்த நாட்கள் மேலும் கார்த்திகை மாதம், சுப காரியங்களுக்கு உகுந்த மாதம் என ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் தங்கத்தின் தேவை அதிகரித்திருந்தது, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

கொரோனா தொற்று பாதிப்பால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் விவேகமாக தங்கத்தை வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று கனிசமாக குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை மாற்றத்தைப் பார்த்தால், 8 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் (22 காரட்) 4,514 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை (22 காரட்)  64 ரூபாய் குறைந்து 36,112 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கமும் ஒரு கிராம் 21 ரூபாய் குறைந்து 4,904 ரூபாயாகவும், ஒரு சவரன் 168 ரூபாய் குறைந்து 39,232 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து,  ரூ 65.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 100 குறைந்து, ரூ. 65,500 க்கும் விற்பனை ஆகிறது.

மேலும் படிக்க:

Gold Price: இன்று ரூ.1000 மலிவானது தங்கம்!

Gold: தங்கம் விலையில் ரூ. 8900 குறைந்தது

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)