பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த அரசு வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி வசதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் - யு.பி.எஸ்.சி., (UPSC) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹெல்ப்லைன் எண்
இன்றைய கால கட்டத்தில் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் அரசு வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிமுகம் செய்துள்ளது. இது, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள் (EWS) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட சேவையாகும்.
யு.பி.எஸ்சி., தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அல்லது விண்ணப்பிக்க விரும்பும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்கள் 1800118711 என்ற கட்டணமில்லா தொலைபேசியை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் ஏதேனும் சிரமத்தை எதிர் கொள்கிறவர்களும் இந்த பிரத்யேக உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த சேவையானது இந்தியா சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஆசாடி கா அமிர்த மஹோத்ஸவ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஹெல்ப்லைன் (Helpline) அனைத்து வேலை நாட்களிலும், அலுவலக நேரங்களில் செயல்படும்.
மேலும் படிக்க
வேலை வாய்ப்பளிக்கும் திறன் தாக்கப் பத்திரம்: இந்தியாவில் அறிமுகம்!