சிறு குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக, மருத்துவ ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வெளியாகும், 'லான்செட்' என்ற மருத்துவ ஆய்வு இதழில், மருத்துவ நிபுணர்கள் எழுதி உள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதை இங்கு காணலாம்.
தக்காளி காய்ச்சல் (Tomato Fever)
இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளுக்கும், ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கும் இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல், உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உருவாகுவது ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த கொப்புளங்கள் பெரிதாகி, தக்காளி அளவுக்கு பெரிதாகும் என்பதால், இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. தற்போதைக்கு கேரளா, ஒடிசா, தமிழகத்தில் இதன் தாக்கம் உள்ளது. இது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும்.
அதே நேரத்தில் தற்போது இந்தியாவில், 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமும் இதன் பாதிப்பு உள்ளது. இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது. அதனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா போலியா? கண்டறிவது எப்படி?