News

Saturday, 11 December 2021 06:00 PM , by: KJ Staff

Tomato price in Chennai decreased

சென்னையில் இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்திருக்கிறது. இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

சென்ற மாதம் முழுவதும் கனமழை காரணமாக, சென்னையில் காய்கறிகளின் விலையில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. சந்தையில் காய்கறி வரத்து குறைந்து அதன் தேவை அதிகரித்தது. இதனால் தக்காளி விலை 150 ரூபாய்க்கு மேல் உயர்ந்து சென்னை மக்களை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வெங்காயம், பீன்ஸ், முருங்கை போன்ற மற்ற காய்கறிகளின் விலையும் ஏற்றமடைந்திருந்தது. எனினும் தற்போது தக்காளியின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளது.

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகம் அதாவது (KWMC) மூன்றில் ஒரு பங்கு தக்காளிகளை மட்டுமே கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 04ஆம் தேதி) பெற்றிருந்தது, இதுவே தக்காளி விலை கிலோவுக்கு 20-50ரூபாய் அதிகரிக்க காரணமாகும். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளியின் விலை உயர்ந்திருந்தது.

ஆனால் இன்று(டிசம்பர் 11), சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி, தங்கம் விலைப்போல் ஏற்றத்துடன் காணப்பட்ட, ஒரு கிலோ தக்காளியின் விலை, 80 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. வெங்காயம் விலை ரூ.34லிருந்து ரூ.40ஆக அதிகரித்துள்ளது. பீன்ஸ் ரூ.70லிருந்து 55ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு 30 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. கேரட் விலை 75 ரூபாயாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காய்கறி விலைப் பட்டியல்! காணுங்கள்

  • தக்காளி – 70 ரூபாய்
  • வெங்காயம் – 40 ரூபாய்
  • அவரைக்காய் – 90 ரூபாய்
  • பீன்ஸ் – 55 ரூபாய்
  • பீட்ரூட் – 65 ரூபாய்
  • வெண்டைக்காய் - 90 ரூபாய்
  • நூக்கல் – 60 ரூபாய்
  • உருளைக் கிழங்கு - 30 ரூபாய்
  • முள்ளங்கி - 45 ரூபாய்
  • புடலங்காய் - 80 ரூபாய்
  • சுரைக்காய் - 60 ரூபாய்
  • பாகற்காய் - 60 ரூபாய்
  • கத்தரிக்காய் - 90 ரூபாய்
  • குடை மிளகாய் - 100 ரூபாய்
  • கேரட் - 75 ரூபாய்
  • காளிபிளவர் - 70 ரூபாய்
  • சவுசவு - 30 ரூபாய்
  • தேங்காய் - 30 ரூபாய்
  • வெள்ளரிக்காய் - 20 ரூபாய்
  • முருங்கைக்காய் - 250 ரூபாய்
  • இஞ்சி - 60 ரூபாய்
  • பச்சை மிளகாய் - 40 ரூபாய்
  • கோவைக்காய் -50 ரூபாய்.

இது சென்னை மொத்த சந்தையான கோயம்பேடு சந்தையின் நிலவரம்.

மேலும் படிக்க:

நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையை எவ்வாறு பரிசோதிக்கலாம்!

PM Kisan: விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி வெளியிடும் அரசு!

 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)