நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக (DMK) தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது.
தி.மு.க. MLA கூட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின் (Stalin) தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதல் அமைச்சராக எம்.எல். ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்க உள்ளனர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை வழங்க உள்ளார்.
பதவியேற்பு
கவர்னரிடம் கடிதம் அளித்த பின்னர், அநேகமாக வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறவிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
அண்ணா அறிவாலயமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதேபோல பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகையால் அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக, முத்தரசன் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க
தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!