இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில், வாழ்க்கையில் ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்று இருப்பவர்கள் அதிகம். தங்களுக்கு உகந்த மற்றும் பட்ஜெட் விலையில் இருக்கும் கார்களை தேடித் தேடி வாங்குகிறார்கள். புதிய கார்கள் அதிக விலையில் இருப்பதால், பயன்படுத்தப்பட்ட செகணட் கார்களை வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.
கார் நிறுவனங்களும் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப விலைப் பட்டியல் மற்றும் உபகரணங்களின் விலையை மாற்றிக் கொண்டே இருப்பதால், எந்த காரின் விலை குறைவாக இருக்கிறது என்பது மக்களுக்கு தெரிவதில்லை. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கியிருப்பதால், குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் டாப் 3 கார்கள் எவை என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மாருதி ஆல்டோ ( Maruti Alto)
மாருதி ஆல்டோவில், 796 சிசி 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கார் உள்ளது. இந்த எஞ்சின் 48 பிஎஸ் பவரையும், 69 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு இந்தக் கார் உகந்தது.
டஸ்டன் ரெடி கோ (Dustin Ready Go)
Datsun Redi Go மாடல் கார், மாருதி ஆல்டோவிற்கு அடுத்தபடியாக இந்த பிரிவில் 999 cc 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கும் இரண்டாவது குறைந்த விலை கார். இந்த எஞ்சின் 54 பிஎஸ் பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. டஸ்டன் ரெடி கோ மாடல் கார் 22.0 kmpl மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது. இந்த மைலேஜ்ஜூக்கு ARAI சான்றளிக்கப்பட்டுள்ளது. Datsun redi GO-ன் அடிப்படை மாடல் ரூ.3,83,800 -க்கு எக்ஸ்ஷோரும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மாருதி எஸ்-பிரஸ்ஸோ (Maruti S-Presso)
மாருதி எஸ்-பிரஸ்ஸோ குறைந்த விலை மைக்ரோ எஸ்யூவி ஆகும். இந்த எஸ்யூவியில், 998 சிசி கொண்ட 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கும். நாட்டிலேயே குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய இந்தக் காரின் எஞ்சின் 68 பிஎஸ் பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 21.4 kmpl மைலேஜ் தருவதாக ARAI சான்றளித்துள்ளது. மாருதி எஸ் பிரஸ்ஸோவின் அடிப்படை மாடலின் ஆரம்ப விலை ரூ.3,99,500-க்கு டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க