தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நமது பயன்பாடுகளுக்காக செல்போனில் பல செயலிகள்(ஆப்) வந்துவிட்டன இருப்பினும் இது போன்ற செயலிகள் கடும் பிரச்சனைகளை தருகின்றவையாய் இருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகவே உள்ளது. தற்போது இந்தியாவில் நடக்கும் ஒரு கடும் மேசடியான "பிங்க் வாட்ஸ்அப்"பற்றி இப்பகுதியில் விரிவாக பாப்போம்.
"வாட்ஸ்அப்" தகவல்கள் பரிமாற்றத்துக்கு மிகச்சிறந்த செயலியாக இயங்கி வருகிறது, இதில் நாம் சேரும் தேவையற்ற குழுக்கள் மூலமாக பல மோசடி மன்னர்கள் நமது முழுத்தகவல்களையும் திருடி வங்கி கணக்கிலிருந்து பணத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
சமீப காலமாக வாட்ஸ்அப் குழுக்களில் வளம் வரும் "பிங்க் வாட்ஸ்அப்" என்ற செயலியின் லிங்கை தொட்டால் நமது முழுத்தகவல்களையும் திருடி வங்கி கணக்கிலிருந்து பணத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் ஆபத்தான வைரஸ் இதுவாகும். முதலில் வாட்ஸ்அப் குழுக்களில் பிங்க் லிங்கை அனுப்பி பதிவிறக்கத்திற்கு இணைப்பை கிளிக் செய்ய கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பதிவிறக்கம் செய்யும் போது லிங்கில் மறைந்திருக்கும் ஆபத்தான வைரசும் சேர்ந்து பதிவிறக்கம் ஆகிவிடும்.
முதலில் வாட்ஸ்அப் குழுக்களில் "பிங்க் வாட்ஸ்அப்" என்ற செயலியின் பதிவிறக்க லிங்கை பதிவு செய்து பின் அதை பதிவிறக்கம் செய்யும்படி அதில் குறிப்பிட்டுள்ளனர் , கவர்ச்சிகரமான மற்றும் வித்யாசமான பதிவை கண்டு தப்பித்தவறி அந்த லிங்கை கிளிக் செய்து விட்டால் அந்த லிங்கில் மறைந்திருக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் உங்கள் செல்போனில் உள்ள முழுத்தகவலையும் கைப்பற்றுகிறது.
கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உடனடியாக மொபைலில் முழுமையாக பரவி வாட்ஸ்அப் குழுவில் பதிவிடும் நபர் எந்த குழுவில் இருந்தாலும் அந்த குழுவில் உள்ள நபருக்கு பிங்க் வாட்ஸ்அப் அப்டேட் என்று தானாகவே பதிவாகிறது.
இந்த லிங்கை தொட்டவுடன் வாட்ஸ்அப் முழுவதும் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்குகள் முதல் பிரைவேட் தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்கள், தொலைபேசி எண்கள் வரை அனைத்தும் கைப்பற்றப்படுகிறது.
கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் அதிகம் பரவி வரும் இந்த லிங்கை யாரும் தொடவேண்டாம் என்று அம்மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இது தமிழகத்தில் பரவி வருவதாக செய்தி பரவி வருகிறது. இதனால் அனைவரும் இதை கருத்தில் கொள்ளுமாறு தெரிவிக்கபட்டுள்ளது. இந்த லிங்க் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் தெரிவிக்குமாறு சைபர் கிரைம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த செயலியாக இருந்தாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோடு செய்ய வேண்டும்.
வேறு எந்த இணைப்பிலும் டவுன்லோடு செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று போலீசார் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
இறக்குமதி வரியினை 5% குறைத்த அரசு- எண்ணெய் விலை குறையுமா?
செந்தில்பாலாஜியின் துறை மிஸ்டர்-க்ளீன் அமைச்சரிடம் ஒப்படைப்பு- முழு விவரம்