MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவின் ஒருபகுதியாக ஹரியானா மாநிலம் கரவுண்டி கிராமத்திலுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து கௌரவித்தது கிரிஷி ஜாக்ரன் குழு. மேலும், இந்த சந்திப்பின் போது நடப்பாண்டு நடைப்பெற உள்ள MFOI 2024 நிகழ்வு குறித்தும், அவற்றில் இடம்பெற்றுள்ள விருதுகளுக்கான பிரிவுகள் குறித்தும், மஹிந்திரா டிராக்டர் பராமரிப்பு குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கிரிஷி ஜாக்ரனின் முன்னெடுப்புகளில் ஒன்றான ”MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா” ஹரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் (மே 15) கைதல் பகுதியை சென்றடைந்தது பாரத் யாத்ரா. நெல், கோதுமை, காய்கறி சாகுபடியில் ஈடுபடும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் யாத்ரா வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
முற்போக்கு விவசாயிகளுக்கு பயிற்சி:
யாத்ரா நிகழ்வில் பங்கேற்ற முற்போக்கு விவசாயிகளுக்கு மஹிந்திரா டிராக்டர் நிறுவனத்தின் சார்பில் ராகுல் சைனி என்னும் இயந்திரவியல் துறை நிபுணர், டிராக்டர்களை பராமரிக்கும் விதம் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து Stihl India நிறுவனத்தை சேர்ந்த ஹர்ப்ரீத் சிங், Stihl நிறுவனத்தின் வேளாண் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பின் போது மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம், தனது சமீபத்திய டிராக்டர்களை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியாக முற்போக்கு விவசாயிகளுக்கு கிரிஷி ஜாக்ரன் சார்பில் அவர்களது பணிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
MFOI VVIF kisan Bharat yatra:
MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்பும் நோக்கத்தோடு MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தை, மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த யாத்ரா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த பயணத்தின் வாயிலாக 6000 கி.மீ தூரத்தை கடந்து, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்துள்ளது கிரிஷி ஜாக்ரான்.
MFOI 2024 நிகழ்வு:
2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லுனர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Read more:
நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்?
விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன?