சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சலுகைபுரத்தில், முத்தரையர் சமுதாய பெண்கள் பாரம்பரிய முறைப்படி வெண்சேலை உடுத்தி, வெண் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
கால்நடைகளுக்கு மரியாதை (Respect to Livestock)
மதகுபட்டி சுற்றுப்புற கிராமங்களில், முத்தரையர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். இவர்களது குலதெய்வமான பச்சை நாச்சியம்மன் சாலூரில் உள்ளது. இச்சமுதாயத்தினர் ஆண்டுதோறும் தை 2ம் தேதி மாட்டு பொங்கல் அன்று விவசாயத்திற்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் உழைக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்வது வழக்கம்.
சலுகைபுரத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த சாமியாடி நேற்று காலை 11:00 மணிக்கு, ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்றார். வீடுகளில் அவருக்கு காணிக்கை கொடுத்து வரவேற்றனர். பின்னர், வெண்சேலை அணிந்த பெண்கள் வீட்டில் இருந்து ஊர்வலமாக, மேளதாளம், சங்கு ஒலி எழுப்பி பொங்கல் பானைகளை தலையில் சுமந்தவாறே, மாட்டு தொழுவத்தின் முன் கூடி வெண் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
திருமண தடைதொழுவில் சேர்ந்த கரும்பு, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு, அந்த தொகையை கோவில் கணக்கில் செலுத்துவர். அன்று மதியம் அனைவரின் வீட்டிலும் சைவ சாப்பாடு அன்னதானமாக வழங்கப்பட்டது.
பாரம்பரிய பொங்கல் (Traditional Pongal)
சலுகைபுரத்தைச் சேர்ந்த அகிலா கூறியதாவது: எங்கள் குல தெய்வம் பச்சை நாச்சியம்மனுக்கு பிடித்த ஆடை வெண்சேலை. அதை பாரம்பரியமாக உடுத்தி தான், பெண்கள் வெண் பொங்கல் மட்டுமே வைப்பர்.
பிள்ளை வரம் வேண்டி தொட்டில் கட்டியும், திருமண தடை நீங்க வேண்டுதல் வைத்தால், அடுத்த ஆண்டிற்குள் நிறைவேறி விடும். விரத காலங்களில் வீடுகளில் உணவுக்காக தாழிப்பது கிடையாது. பெண்கள் கொலுசு, மெட்டி, வளையல் உட்பட எந்தவித ஆபரணங்களும் அணியாமல் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து
வழிபாடு நடத்துவோம்.
மேலும் படிக்க
மகத்துவம் நிறைந்த போகிப் பண்டிகை!
போகியில் புகை இல்லை: மக்களுக்கு நன்றி கூறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்!