News

Thursday, 11 August 2022 09:03 AM , by: Elavarse Sivakumar

பிரிட்டனில் பேஸ்புக் விளம்பரத்தை நம்பி, கழுத்துப்பகுதி சதையை குறைக்க சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு, கழுத்து முழுவதும் ஊர்வன போன்று மாறியது. அதாவது சிவப்பு புள்ளிகள் முளைத்து, பல்லி போன்று மாறிய சம்பவம் அதிர்ச்சிவலைகளை ஏற்படுத்தி உள்ளது.


ரூ.48,000

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 59 வயதாகும் ஜெய்ன் போமன் என்பவர் தனது கழுத்தில் உள்ள சதைப்பகுதியை இறுக்கமாக மாற்ற ஆசைப்பட்டார். இதற்காக அவர் தேர்வு செய்தது ஃபைப்ரோபிளாஸ்ட் சிகிச்சை. இதற்கு அவர் செய்த செலவு எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் ரூ.48,000 சிகிச்சைக்கு கட்டணமாக செலுத்தி உள்ளார்.

பல்லி போன்று

சிகிச்சையின் போது திசு வளர்ப்பை ஊக்குவிக்க கழுத்தில் அதிக அதிர்வெண் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனத்தை தோலில் பயன்படுத்தியுள்ளனர்.
சிகிச்சை முடிந்த நிலையில்,அவருக்கு கழுத்தில் பல்லி போன்று நூற்றுக்கணக்கான சிவப்பு புள்ளிகள் மற்றும் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. பேஸ்புக்கில் வந்த தகவலை பார்த்து தான் அப்பெண் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இறுதியாக சிவப்பு புள்ளிகள் மறைந்துவிட்டன. ஆனாலும், அது பெரும் சோதனையாக முடிந்துள்ளது.

டயட்

பாதிக்கப்பட்ட ஜெய்ன் போமன் கூறுகையில், உடல் எடையைக் குறைக்க டயட் மேற்கொண்டதால் கழுத்துப்பகுதியில் சதை அதிகமாக தெரிய துவங்கியது. இதனையடுத்து பேஸ்புக்கில் கழுத்து சதைப்பகுதியை குறைக்க ஏதேனும் சிகிச்சை முறை உள்ளதா என்று கேட்டேன். அப்போது தான் பியூட்டிஷியன் ஒருவர், ஃபிப்ரோபிளாஸ்ட் பிளாஸ்மா சிகிச்சை பற்றி கூறினார்.

தீ பிடித்தது போல

நான் அவருடைய பேஸ்புக் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அனைத்து சிறப்பான ரிவ்யூ மற்றும் தகுதியும் உடையவராக தான் தெரிந்தது.
ஆனால் சிகிச்சைக்கு சென்ற போது, என் கழுத்து தீ பிடித்தது போல இருந்தது. சில வாரங்களுக்கு பிறகு எந்த மாற்றமும் இல்லை. என் மார்பு பகுதி வரை நூற்றுக்கணக்கான சிவப்புப் புள்ளிகள் தான் வந்தன. என்னை பார்க்கையில், ஒரு பல்லி போல இருந்தேன்.

பலர் மோசமானவர்கள்

நான் முகத்தை மூடும் துணி இல்லாமல் வெளியே செல்வதில்லை. உண்மையில் எனக்கு வெளியே செல்வது பிடிக்கவில்லை. நான் எல்லா அழகுக்கலைஞர்களையும் குறை சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இல்லை. ஆனால் பலர் மோசமானவர்களாக உள்ளனர்.

பேஸ்புக்கில் பியூட்டிஷியன் குறித்து கடுமையாக விமர்சித்ததற்காக போலீசார் என்னை தொடர்பு கொண்டனர். ஆனால் ஆச்சர்யமாக, மற்றவர்களும் இதே போன்று பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கவே, நான் சரியாக தான் இருக்கிறேன் என எண்ணிகொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சாலையில் இறங்கி துணி துவைத்து, தவம் செய்த இளைஞர்!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)