ராணுவ மோப்ப பிரிவு நாய்களுக்கு கொரோனா தொற்றை (Corona Virus) கண்டறியும் பயிற்சி (Training) அளிக்கப்பட்டு வருகிறது. முழு கவச உடை அணிந்த ராணுவ வீரர்கள் (Army Officers), நாய்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
நாய்களுக்கு பயிற்சி
வியர்வை மற்றும் சிறுநீர் மாதிரிகளைக் (Urine samples) கொண்டு கொரோனா தொற்றைக் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் ஜெயா (Jeya) மற்றும் மணி (Mani) எனப் பெயரிடப்பட்ட இரண்டு நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொரோனாத் தொற்றை கண்டறியும் முறை
சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா தொற்றை கண்டறிதவற்கு, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் (Cocker Spaniel) வகை நாய்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது. டெல்லி மற்றும் சண்டிகர் முகாம்களில் இதுவரை 3806 வீரர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
செயல்விளக்கம்
மோப்ப சக்தி (Mob power) மூலம் கொரோனா தொற்றை கண்டறிவது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், காஸ்பர் என்ற பெயருடைய காக்கர் ஸ்பேனியல் வகை நாய், நொடிப்பொழுதில் கொரோனா பாதிப்பு உள்ள மாதிரியை அடையாளம் காட்டி வியக்க வைத்தது. இதேபோன்று பயிற்சி பெற்ற சிப்பிப்பாறை வகை நாய்களான ஜெயா, மணி ஆகிய நாய்களும் உடனிருந்தன.
மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் கர்னல் சுரேந்தர் சைனி (Surender Saini) இதுபற்றி கூறுகையில், ‘வியர்வை மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பயன்படுத்தி கொரோனாவைக் (Corona) கண்டறிவதற்கு இந்திய ராணுவ நாய்கள் (Indian Army Dogs) பயிற்சி பெற்றிருக்கின்றன. லாப்ரடார்கள் மற்றும் உள்நாட்டு இனமான சிப்பிப்பாறை வகை நாய்கள் சிறுநீர் மாதிரிகள் மீதும், காக்கர் ஸ்பேனியல் நாய்கள் வியர்வை மாதிரிகள் மீதும் பயிற்சி பெற்றுள்ளன.
இப்போது வரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் தரவுகளின் அடிப்படையில், மோப்பநாய்களின் உணர்திறன் (Sensitivity) 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. பயன்படுத்தப்படும் மாதிரிகள் (சிறுநீர் மற்றும் வியர்வை) வைரஸ் அழிக்கப்பட்ட மாதிரிகள் என்பதால் நாய்களுக்கு தொற்று ஏற்படாது. கொரோனாவின் தன்மையான நிலையற்ற வளர்சிதை மாற்ற பயோமார்க்கரை மட்டுமே கொண்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து மதுரையில் பிரபலமாகும் நாய்கள் கண்காட்சி!
விவசாய பயிர்கள் கடன் தள்ளுபடி அரசாணை வெளியிட்டார் தமிழக முதல்வர்!