இயற்கை வேளாண்மை செய்ய வேண்டிய அவசியம், இயற்கை வேளாண்மை பணி அனுபவம் மற்றும் செயல் விளக்க பயிற்சி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலல் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சி வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பெரிதும் உதவியாக அமையும்.
வேளாண் பயிற்சி (Agriculture Training)
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ரிஷியூர் ஆர்.கே.எம். இயற்கை வேளாண் பண்ணை உள்ளது. இப்பண்ணையில் இயற்கை வேளாண்மை செய்ய வேண்டியதன் அவசியம், இயற்கை வேளாண்மை பணி அனுபவம் மற்றும் செயல் விளக்க பயிற்சி வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வேளாண் பயிற்சிகள், இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விவசாய நுணுக்கங்களையும் அறிந்து கொள்கின்றனர். இப்பயிற்சியின் மூலம், விவசாயிகள் இயற்கை உரங்களை எவ்வாறு உபயோகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்ணாரக் காண முடியும்.
பாரம்பரிய நெல் ரகங்கள் (Traditional Paddy Types)
இயற்கை விவசாயி செந்தில் உமையரசி அவர்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அவற்றுள் பால் குடல் வாழை அரிசி, தங்கச் சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி, பூங்கார், மாப்பிள்ளை சம்பா ஆகிய பாரம்பரிய அரிசி வகைகளின் பயன்கள் குறித்தும், அவற்றை பயிரிடும் முறைகள் குறித்தும் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க