News

Thursday, 24 February 2022 10:52 AM , by: Elavarse Sivakumar

நாம் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது, பின்புறச் சக்கரம் கழன்று ஓடினால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கும்போதே பீதியைக் கிளப்பும் சம்பவம். அப்படியொரு அனுபவம் இங்கு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டது.தாராபுரம் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது தனியார் பள்ளி பேருந்தின் பின் சக்கர டயர் தனியாக கழன்று ஓடியதில் பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு முடிந்தவுடன் மாணவர்கள் பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பேருந்தின் பின் பக்க டயர் தனியாக கழன்று ஒடியுள்ளது. இதை பார்த்த டிரைவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் திடீரென பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்த 15 மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள வாகனங்களைச் சோதனை நடத்தித் தரச் சான்றிதழ் வழங்கிய பின்பு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க...

அடடா வேர்க்கடலையில் இத்தனைப் பக்க விளைவுகளா?

இதுக்குகூடவாக் கல்யாணம் நிறுத்துவாங்க? அடக் கொடுமையே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)