மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பு (டிரைஃபெட்) தனது டிரைப்ஸ் இந்தியா வரிசையின் கீழ் 100 புதிய பொருட்களைச் சேர்த்துள்ளது.
பசுமை இயற்கை பொருட்களான இவற்றை காடுகளில் இருந்து டிரைப்ஸ் இந்தியா (Tribes India) கொண்டு வருகிறது. ஃபாரஸ்ட் இப்ரெஸ் நேச்சுரல்ஸ் அண்ட் ஆர்கானிக் என்று பெயரிடப் பட்டுள்ள இந்தப் புதிய வகை பழங்குடிப்ப் பொருட்களை, டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் பிரவிர் கிருஷ்ணாஅறிமுகம் செய்தார்.
ஒவ்வொரு வாரமும் 100 புதிய பொருட்களை டிரைப்ஸ் இந்தியாவில் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பொருட்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவை டிரைப்ஸ் இந்தியாவின் 125 மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியாவின் நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிக தளமான tribesindia.com-லும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடமாடும் இந்திய பழங்குடிகள் வாகனங்களை காணொலி காட்சி மூலம் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக, அகமதாபாத், அலஹாபாத், பெங்களூரு, போபால், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, கவுகாத்தி ஹைதரபாத், ஜகதல்பர். குந்தி, மும்பை மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் 57 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
மேலும் படிக்க...
பட்டியலின விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த களை மேலாண்மைப் பயிற்சி!
நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுத் தாக்குதல் - கட்டுப்படுத்த எளிய வழிகள்!