இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 May, 2019 12:15 PM IST

இந்தியா இறால்களுக்கு உலக சந்தையில் எப்போதும் நல்ல மதிப்பு உண்டு. அமெரிக்காவின்  தற்போதைய டிரம்ப் அரசு  சீனாவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே நிலவும் வர்த்தக ரீதியான பனி போர் முக்கிய காரணமாகும்.

அமெரிக்கா அரசு தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறால் மற்றும் கடல் சார்த்த உணவு பொருட்களுக்கு 10% இல் இருந்து 25 % ஆக வரியினை உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியா இறால்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களுக்கு தேவை அதிகம் இருப்பதால்  அவ்வகையான தொழிலினை அரசு ஊக்க படுத்த வேண்டும். இந்தியா மிக குறைத்த அளவிலான தொழிற்சாலைகள் பதப்படுத்தப்பட்ட, சூடு மட்டும் செய்து சாப்பிடக்கூடிய பொருட்களை தயாரித்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற உணவுகளுக்கு தேவை அதிகம் இருப்பதால் இந்தியாவில்  இது போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று இறால் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கூறினார்.

கடந்த ஆண்டு இந்தியா 35,000 டன் அளவிலான மதிப்பு கூட்டபட்ட  பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து உள்ளது. இதில் அனைத்து வகையான  பதப்படுத்தப்பட்ட பொருட்களும் அடங்கும். இதன் மூலம் நமக்கு 350 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடல் உணவு, கடல் சார்த்த உணவு, மற்றும் பதப்படுத்தபட்ட உணவு ஆகியவைகளின் தேவை எப்பொழுதும் இருப்பதினால் அதற்கான சந்தை நமக்கு சாதகமாக உள்ளது எனலாம். எனவே இந்த வர்த்தகத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முறையான  சேமிப்பு கிடங்கு, தேவையான இட வசதி, சுகாதாரமான தொழிற்சாலைகள் ஆகியன இன்றியமையாத ஒன்றாகும். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் இறால் சேமிப்புக்கு உகந்த மாதமாகும்.

English Summary: Trump's New Tariff Against China: Shrimp Exporters Are Worrying: India Can Utilize
Published on: 17 May 2019, 12:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now