News

Wednesday, 06 January 2021 06:41 PM , by: Daisy Rose Mary

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமே எதிர்பார்க்கும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் காளைகளுக்கு இன்று முதல் கால்நடை மருத்துவமனைகளில் தகுதிச்சான்று வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையில் முக்கிய பொருட்களாக மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள் அங்கம் வகிக்கின்றது. தோகையுடன் காணப்படும் மஞ்சள்குலையை வீடுகள் தவறாமல் மக்கள் வாங்கி வைத்து வழிபடுவார்கள். தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அதிகமாக பயிரிடப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை ராஜவல்லிபுரம், அருகன்குளம், பாறையடி, கடையம், சங்கரன்கோவில், வீரகேரளம்புதூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகம் உள்ளது.

இயற்கை மழை தந்த வரம்

புரட்டாசி பட்டத்தில் புரெவி, நிவர் என புயல்களைக் கடந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதேபோல், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும் மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளதோடு விற்பனையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ரூ.5 லட்சத்துக்கு வர்த்தகமான மஞ்சள்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில், வாரந்தோறும் செவ்வாய் கிழமை மஞ்சள் ஏலம் நடப்பது வழக்கம். தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் சீசன் முடியும் நிலையில் உள்ளதால் மூட்டை வரத்து குறைந்து வருகிறது. நேற்று, விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், ரூ.5,062 - அதிகபட்சம், ரூ.7,239க்கும் விற்பனையாகின. மேலும், உருண்டை ரகம் ரூ.4,612- ரூ.5,462; பனங்காலி ரகம், ரூ.6,619-ரூ.7,012 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. மொத்தம், விரலி மஞ்சள் 160 மூட்டைகள், ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது

மேலும் படிக்க...

அசத்தும் இந்திய விவசாயிகள்! 10 ஆண்டுகளுக்கு பின் வியட்நாம்க்கு அரிசி ஏற்றுமதி..!

புதிய விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்று முதல் தகுச்சான்று வழங்கல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)