மத்திய அரசின் மலைக் காய்கறி பயிர்களான, பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மலைவாழ் விவசாயிகள் இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அழைப்பு விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 6,000 ஹெக்டர் பரப்பளவில் மலை தோட்டப்பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு, இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிக முதலீட்டில் செய்யப்படும் இவ்வகை விவசாயத்தில் இயற்கை சீற்றங்களினால் தோன்றும் இழப்புகள் மிக அதிகம். கடந்த முறை பெய்த கனமழையால் மலை தோட்டப்பயிர்கள் பெருமளவில் சேதமாசடைந்தன.
மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வரை உருளைக்கிழங்கு, மரவள்ளி மற்றும் வாழை போன்ற பயிர்களுக்கு மட்டுமே காப்பீட்டு செய்ய அனுமதி இருந்தது. இந்நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் முயற்சியால் இவ்வாண்டு முதல் கேரட், முட்டைகோஸ், பூண்டு மற்றும் இஞ்சி பயிர்களுக்கும் பயிர் பாதுகாப்பீடு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
எதிர்பாரதவிதமாக தோன்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாக்க இத்திட்டம் உதவும் என்பதால் இணைந்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
Anitha Jegadeesan
Krishi Jagran