மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 52வது கூட்டத்தில், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் PMAY (U) கீழ் 1,68,606 புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 14 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பங்கேற்றன. இந்த வீடுகள், பயனாளிகளின் தலைமையிலும், கூட்டு முயற்சியில் சிக்கன விலை வீடுகளாகவும், குடிசைப் பகுதிகளில் மேம்பாடு வீடுகளாகவும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலப் பிரச்னைகள், நகரங்களுக்கு இடையேயான இடம் பெயர்வு, கட்டுமான திட்டத்தில் மாற்றம் போன்ற பல காரணங்களுக்காக, வீட்டுத் திட்டங்களை மாற்றியமைக்கும் விருப்பங்களை மாநிலங்கள் தெரிவித்துள்ளன. 70 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானங்கள் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றன. 41 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முடிவடைந்துள்ளன.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவாகரத்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா பேசுகையில், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கான உத்திகளை மாநிலங்கள் வகுக்க வேண்டும். இத்திட்டத்தின் முன்னேற்றம் சீராக உள்ளது, அனைத்து வித அடிப்படை மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வீடுகளை நாம் முடிக்க வேண்டும்.
வீடுகளை முடித்து பயனாளிகளுக்குக் கொடுப்பதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலை வாடகை வீடுகள் திட்டத்தை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் விரைந்து அமல்படுத்த வேண்டும்.
சென்னை (தமிழ்நாடு), அகர்தலா (திரிபுரா), ராஞ்சி (ஜார்க்கண்ட்), லக்னோ (உத்தரப்பிரதேசம்), இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய 6 நகரங்கஙளில், பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் 6 சிறு வீடுகள் திட்டத்தில் இருந்து தொழில்நுட்பங்களை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கற்றுக் கொள்ளலாம். அதே தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பயன்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு!!
பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
பசுமைக்குடில் அமைக்க ரூ.4.67 லட்சம் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!