News

Tuesday, 02 July 2019 01:54 PM

மக்களவையில் வரும் ஜூலை 5ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்  செய்ய உள்ளார்.  இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள பாஜக அரசின் முதல் பொது பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

முதன் முறையாக நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட்  தாக்கல் செய்ய இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளார். மேலும் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு பல் வேறு  துறை சார்தவர்களிடம் மட்டுமல்லாது சாமானியர்களிடமும்  அதிகமாக உள்ளது எனலாம்.

பட்ஜெட் குறித்த விவாதங்கள், கருத்துக்கணிப்புகள் கடந்த மாதம் நடை பெற்றது. இதற்காக நாடு முழுதிலுமிருந்து  226 தொழில் நிறுவனங்கள்  பங்கேற்றன. இதில் பெரும்பாலான மக்கள் தனிநபர் வருமான வரி விலக்கு  ரூ.2.5 லட்சத்திலிருந்து உயர்த்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பலதரப்பட்ட கேள்விகள் பல்வேறு மக்களிடம் கேட்க பட்டன.  ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு அதிக பட்சமாக 40% வரி விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பரம்பரை சொத்துக்கான வரி,  சொத்து வரி போன்றவை அறிமுக படுத்தும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று வீட்டுக்கடன் வரி விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.    

கடந்த மாதம் பிப்வரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் இருக்கும் பட்சத்தில் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதே போன்று  5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு  வரி விலக்கு  பொருந்தாது எனவும் கூறப்பட்டது.

வரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு மேலும் உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  அதாவது ஆண்டு வருமானம்  7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்குமேயானால் 20% பதிலாக 5% வரியைச் செலுத்தினால்போதும் என்ற நிலை வரலாம் என எதிர்பார்க்க படுகிறது. 

குறைந்தபட்ச மாற்று வரி (Minimum Alternate Tax) என்பது பூஜ்ஜிய வரி வரம்புக்குட்பட்டாலும்  நிறுவனங்கள் செலுத்தும் குறைந்தபட்ச வரி செலுத்துவதற்கும். நிறுவனங்களைப் பொறுத்தவரை மேட் எனப்படும் இந்த  வரியை ரத்து செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)