கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அமைச்சரவை, கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கொள்முதல் விலை உயர்வு:
கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை உள்பட 21 மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி (Coconut Cultivation) செய்யப்படுகின்றது. இதிலிருந்து விவசாயிகள் அதிகமாக கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில் கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum resource price) குவிண்டாலுக்கு 375 ரூபாய் வரை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வேளாண்மை விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு பருவ காலத்தில் 100 கிலோ எடை கொண்ட ஒரு குவிண்டால் அரவை கொப்பரை தேங்காய் (Copra coconut) விலை 9 ஆயிரத்து 960 ரூபாயில் இருந்து 10 ஆயிரத்து 335 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதே போன்று பந்து கொப்பரை தேங்காய் விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 52 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வருவாய் (Income) கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு 4 ஆயிரத்து 896 விவசாயிகளிடம் இருந்து 5 ஆயிரத்து 53.34 டன் முழு கொப்பரையும், 35.58 டன் காய்ந்த கொப்பரையும் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture) குறிப்பிட்டு உள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தேங்காய் மற்றும் கொப்பரை விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும்? TNAU கணிப்பு!
கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை