News

Wednesday, 03 July 2019 11:40 AM

வேளாண்துறையை மேம்படுத்துவதற்காக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தனி அமைப்பை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார். இதன் முக்கிய நோக்கம் வேளாண்துறையின் ஏற்றுமதியை இரண்டு மடங்கு ஆக்குவதே ஆகும்.

வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் ஏற்றுமதியினை 6000 கோடிடாலராக உயர்த்த இலக்கு நிர்ணயத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ 4.20 லட்சம் கோடியாகும். இந்த இலக்கை அடைவதற்கு இரண்டு கூட்டுறவு அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டு  கழகம் (NCTC), மற்றும் கூட்டுறவு துறை  மேம்பாட்டு அமைப்பு  (CSEPF) உருவாக்க பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என அனைத்தும் இடம் பெறும். இந்த அமைப்புகள் ஏற்றுமதியினை ஊக்குவிப்பதோடு, அதற்கு தேவையான உதவிகளை செய்யும்.

இந்தியாவை பொறுத்தவரையில் 8 லட்சத்திற்கும் அதிகமான கூட்டுறவு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள 94% விவசாகிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.   கூட்டுறவு அமைப்புகள் மூலம் ஊக்குவிக்கப்பட்டு ஏற்றுமதியினை அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

தலைநகர் டில்லியில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சர்வதேச கூட்டுறவு கண்காட்சியினை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. வரும் அக்டோபர் 11,12,13 ஆகிய தேதிகளில் பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.     

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)