தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை (Moisture) 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார். இந்தியா முழுவதும் மாதிரி சமூதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து புதுதில்லியில் இன்று ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் மாண்புமிகு பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல் ஈரப்பதம்
21.09.2021 அன்று மாண்புமிகு ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்தபோது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்திட வேண்டுமென்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்காக தமிழ்நாடு விவசாய பெருங்குடி மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரைக்கப்படும் பச்சரியில் 1 லட்சம் டன்னை அருகிலுள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைப்பு செய்து அதற்கு ஈடாக 1 லட்சம் டன் புழுங்கல் அரிசியை வழங்க வேண்டுமென்று அன்று நான் விடுத்த மற்றொரு கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் (MK Stalin) அவர்களின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி ஒன்றிய அரசுடனும் பிற மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு இந்தியாவை பட்டினி மற்றும் சத்துக் குறைவில்லா நாடாக மாற்றத் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று உணவுத் துறை அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க
இலவச உணவு தானியத் திட்டம்: மேலும் 4 மாதங்களுக்கு தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு!
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!