நாடு முழுவதும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ள 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று (Covid-19) காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஜூன் மாதம் முதல் சில கட்டுப்பாடுகளுடன் மாதந்தோறும் சில தளர்வுகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ள மூன்றாம் கட்ட தளர்வுகளை (unlock3) மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home affairs) அறிவித்துள்ளது.
3ம் கட்ட தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்
-
இரவில் தனிநபர்களின் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது இரவில் இனி ஊரடங்கு இல்லை
-
யோகா நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகஸ்ட் 5, முதல் திறக்க அனுமதிக்கப்படும். இதில் பின்பற்றபடவேண்டிய விதிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடும்
-
சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஆகஸ்ட் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் திறக்க அனுமதி கிடையாது.
-
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், சர்வதேச விமான பயணம் குறைந்த அளவுக்கு அனுமதிக்கப்படுகிறது.
எதுக்கு அனுமதி இல்லை?
-
மெட்ரோ ரயில்
-
சினிமா அரங்குகள்,
-
நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள்
-
தியேட்டர்கள், பார்கள், ஆடிட்டோரியங்கள் கூட்ட அரங்குகளுக்கு அனுமதி கிடையாது
-
சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள் மற்றும் பிற பெரிய சபைகள் கூட அனுமதி கிடையாது.
மேற்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (lockdown in containment zones) வரும் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு கண்டிப்புடன் தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அப்பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளின் விவரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளங்களிலும், மத்திய, மாநில அரசுகளாலும் அறிவிக்கப்படும்.கட்டுப்பாட்டு மண்டலங்களில் செயல்பாடுகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளால் கண்டிப்பாகக் கண்காணிக்கப்படும், மேலும் இந்த மண்டலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும்.
கட்டுப்பாட்டு மண்டலங்களை முறையாக வரையறுப்பது மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை மத்திய சுகாதாரத் துறை MOHFW கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே நடவடிக்கைகள் குறித்து மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலைமையைக் கருத்தில்கொண்டு, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே சில நடவடிக்கைகளைத் தடைசெய்யலாம் அல்லது அனுமதிக்கலாம்.
மாநிலங்களுக்கிடையிலும், மாநிலத்துக்கு உள்ளேயும் தனிநபர்கள் நடமாட்டம் மற்றும் சரக்குகள் கொண்டு செல்ல தடை விதிக்கக்கூடாது. அதற்குத் தனியாக அனுமதியோ, இ-பாஸோ பெறத் தேவையில்லை.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நாடு தழுவிய உத்தரவுகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். கடைகள் முன்பு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்கும்
வீட்டில் இருக்க அறிவுறுத்தல்
பாதிக்கப்படக்கூடிய நபர்கள், அதாவது, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுற்ற நபர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
இந்த இந்த இடங்களில் மழை பெய்யும்...! வானிலை மையம் தகவல்
ரக்க்ஷா பந்தன் கொண்டாட்டம் - உங்கள் கைவண்ணத்தில் ராக்கி தயாரிக்க சிம்பிள் டிப்ஸ்!
இந்திய எல்லையில் நுழையக் காத்திருக்கும் (வெட்டுக்கிளி) எதிரிகள் - மத்திய அரசு எச்சரிக்கை!