News

Saturday, 02 January 2021 04:52 PM , by: Daisy Rose Mary

வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க சோலர் மின் வேலி அமைக்க 50% மானியம் வழங்கப்படும் என்று பொள்ளாச்சி வேளாண் துறை உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், விளை நிலத்தில் யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளில் ஊடுருவல் அதிகமுள்ளது. வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, குறைந்த அதிர்வை தரும் மின்வேலி அமைக்கலாம்.சூரிய சக்தியால் இயங்கும் வேலி அமைப்பது நடைமுறையில் உள்ளது. இதற்கு உதவியாக, சோலார் மின்வேலி அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.

வேளாண் பொறியியல் துறை வாயிலாக, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தில், அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேர் அல்லது, 1,245 மீட்டருக்கு வேலி அமைக்கலாம். இதில், ஐந்து வரிசையுள்ள வேலி அமைக்க மீட்டருக்கு உத்தேச செலவாக, 250 ரூபாய் கணக்கிடப்படுகிறது. ஏழு வரிசைக்கு, 350 ரூபாய்; 10 வரிசைக்கு, 450 ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வேலி அமைக்க செலவாகும் தொகையில், 50 சதவீதம் அல்லது, 2.18 லட்சம் ரூபாய் எது குறைவோ அது அதிகபட்ச மானியமாக வழங்கப்படுகிறது. சோலார் மின்வேலி அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள், மீன்கரை ரோட்டில் உள்ள வேளாண் பொறியியல் துறையை தொடர்பு கொள்ளலாம், என, உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

இந்தியர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! - மத்திய அரசு தகவல்!!

தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)