All students pass is misinformation
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2021-22 கல்வியாண்டிலும் 9-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது, பாடத்திட்டம் குறைக்கப்பட்டது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 9-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதே வேளையில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க