News

Wednesday, 25 March 2020 09:23 AM , by: Anitha Jegadeesan

கோவிட்-19 தடுக்கும் நடவடிக்கையாக இன்று முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்ததை அடுத்து மேலும் இந்நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் உரிய காரணமின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தும் தடையின்றி முழுமையாக கிடைக்கும் என்பதால் யாரும் பயப்பட தேவையில்லை என்றார். அத்தியாவசியப் பொருட்ள்கள் அனைத்தும் தேவைக்கேற்ப கையிருப்பு இருப்பதால், பதற்றத்தில் வாங்கிக் குவிக்க அவசியமில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கூடுவதற்கும், நோய் பரவாமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. இருப்பினும் மக்களுக்கு சேவை செய்யும் பொது துறைகள் செயல் படும். எவை எவை செயல்படும் என பார்ப்போம்.

மருத்துவம் சார்ந்த அனைத்து நிறுவனங்கள்

  • மருத்துவமனைகள்
  • மருந்தகங்கள்
  • ஆம்புலன்ஸ்
  • மருத்துவ பரிசோதனை மையங்கள்

பாதுகாப்பு துறை

  • காவல் நிலையம்,
  • தீயணைப்பு
  • ஹோம்கார்டு
  • பேரிடர் மேலாண்மைக் குழு

அத்தியாவிசிய  பொருட்கள்

  • ரேசன் கடைகள்
  • பால் பொருட்கள்
  • இறைச்சி, மீன் கடைகள்
  • உணவகங்கள் (டெலிவரி/பார்சல் மட்டுமே அனுமதி)

மாவட்ட நிர்வாகம்

  • கருவூலம்
  • மின்சாரம், குடிநீர், தூய்மைப்பணிகள்
  • உள்ளாட்சி அமைப்புகள் (அத்தியாவசிய பணிகள் மட்டும்)

நிதி நிறுவனங்கள்

  • வங்கிகள்
  • ஏடிஎம்கள்
  • இன்சூரன்ஸ் அலுவலகங்கள்

இதர பொதுவான சேவை விவரங்கள்

  • ஊடகங்கள், செய்தித்தாள்
  • தொலைத்தொடர்பு, இண்டர்நெட்
  • பெட்ரோல் பங்குகள்/ கேஸ்/ எண்ணெய் நிறுவனங்கள்
  • சேமிப்புக் கிடங்குகள்/குளிர்பதன மையங்கள்
  • அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்

எவை எவை அனுமதி இல்லை?

  • பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சி, விளையாட்டு போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தவிர, பயணிகள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
  • கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
  • இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது.
  • 15.02.2020க்குப் பின் இந்தியா திரும்பிய அனைவரும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கும் வரை கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

மேலே குற்றிப்பிட்டுள்ள விதிமுறைகளை அனைவரும் பின்பற்றும்படி அரசு தெரிவித்துள்ளது.  இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)