மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வன அதிகாரிப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க்காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின் பெயர்: Indian Forest Service Examination
மொத்த காலியிடங்கள்:110
வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Animal Husbandry and Veterinery Science, Botany, Chemistry, Agriculture, Forestry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Engineering
தேர்ந்தெடுக்கப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் ஆன்லைனில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.online.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2021
சம்பளம் மாதிரி மாத வருமானம் தரும் SBI-யின் சூப்பர் திட்டம்!
பணம் செலுத்த இனி எந்த Cardம் தேவையில்லை -வாட்ச் இருந்தால் போதும்!