மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (Union Public Service Commission) ஒருங்கிணைந்த ராணுவ சேவை (II) பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. 2019ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று upsc.gov.in என்ற யுபிஎஸ்சி (UPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
காலி பணியிடங்கள்:
மொத்தம் ஐந்து பிரிவுகள். இதில் 417 காலி பணியிடங்கள் உள்ளன.
1) மிலிட்டரி அகாடமியில் 100 இடங்கள்
2) இந்திய கடற்படை அகாடமியில் 45 இடங்கள்
3) விமானப் படை அகாடமியில் 32 இடங்கள்
4) சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் ஆண்களுக்கு 225 இடங்களும் பெண்களுக்கு 15 இடங்களும் காலியாக உள்ளன.
தேர்வு நாள்:
செப்டம்பர் 8 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்
தேதி ஜூலை 8, 2019 (மாலை 6 மணி)
விண்ணப்பிக்க மறு அவகாசம்
ஜூலை 15 - 22 மாலை 6 மணி வரை.
விண்ணப்பிக்க முறை: https://upsconline.nic.in/ என்ற இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://sarkariresults.info/2019/upsc-combined-defence-service-cdsii.php
கல்வித்தகுதி:
1) இந்திய மிலிட்டரி அகாடமி மற்றும் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பணிபுரிய விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப்படிப்போ அல்லது அதற்கு நிகரான படிப்போ முடித்திருக்க வேண்டும்.
2) இந்திய கடற்படை அகாடமியில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3) விமானப்படை அகாடமியில் பணிக்கு சேர விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும் (பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடத்தைப் படித்திருக்க வேண்டும்) அல்லது இளநிலை பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு அல்லது இறுதி பருவத்தில் இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு எந்த பாடத்திலும் அரியர் இருக்கக் கூடாது.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN