பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க அரசு உத்தேசித்துள்ள பரிசுத் தொகுப்பில் முந்திரியை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு முந்திரி பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TNCPEA) மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், கடலூர் மாவட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட யூனிட்கள் உள்ள முந்திரி பதப்படுத்துதல் பாரம்பரியமாக முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், இத்தொழிலை நம்பி உள்ளனர். எனவே, அரசின் இந்த முடிவு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
2.திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று தீர்வுக்கான விவசாயிகள் குறைதீர்வு முகாம் 30.12.2022 அன்று காலை 10;30 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் (GDP HALL இல்) நடைபெறும். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக ஒப்புகைசீட்டு வழங்கப்படும். முகாமிற்கு வரும் விவசாயிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகாமில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
3.எலித்தொல்லையால் பயிர் நாசம் எலிகளை தடுக்க எலிகிட்டி வைக்கும் விவசாயிகள்
தஞ்சையில் ஆலக்குடி, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி வட்டார பகுதிகளில் எலி பயிர்களை நாசம் செய்வதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். ஆகையால் விளைநிலங்களில் எலிகளை பிடிக்க கிட்டி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு விளைநிலங்களிலும் சுமார் 50 எலிகள் வரை பிடிபடுகின்றன. தற்போது 75 நாட்களை கடந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து பால் பிடிக்கும் நிலையில் பயிர்கள் உள்ளன. எலிகள் நன்கு வளர்ந்து வரும் பயிர்களை துண்டித்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் எலிகள் பயிர்களை அதிகம் நாசம் செய்வதால் விவசாயிகள் எலிகிட்டிகளை பயன்படுத்தி எலிகளை பிடித்து பயிர்சேதத்தை குறைகின்றனர்.
4.தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலத்தின் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் உள்ளன. இதில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த சென்ற செப்டம்பர் 30 ஆம் தேதி தரவரிசை பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கு பின் ஜனவரி 6 ஆம் தேதி 2023 வேளாண் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்குகிறது என பலக்லைக்கழகம் அறிவித்துள்ளது .
5.இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் நினைவுநாள்
இடுப்பில் பச்சை வேட்டி, சட்டையில்லாத வெற்றுடம்பு, பாசாங்கற்ற பளீர் சிரிப்பு, யாருடனும் எளிதாக உரையாடும் இயல்பு. இதுதான் நம்மாழ்வாரின் அடையாளம், இயற்கை வேளாண்மை முன்னேறத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட நம்மாழ்வாரின் முயற்சியை, அவரது ஆதரவாளர்கள் தற்போதும் தொடர்கின்றனர். இயற்கை வேளாண்மை மீதான ஈடுபாடும், அக்கறையும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதற்கு, வாழ்நாள் முழுவதையும் விதையாக மாற்றி நம்மாழ்வார் தந்த ஆக்கமும், ஊக்கமும்தான் காரணம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்த வித்தின் நினைவு நாள் இன்று.
6.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் காலமானார்
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “அம்மாவில் மும்மூர்த்திகளை நான் பார்த்திருக்கிறேன். அவரது வாழ்க்கை ஒரு துறவு பயணம். தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையாக இருந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹீராபென் புதன்கிழமை அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் ரிசர்ச் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
7.புதுச்சேரி அரசு பழத்தோட்டம் மகசூல் அனுபவ உரிமத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன
புதுச்சேரி, மதகடிப்பட்டு அரசு பழத்தோட்டம் மற்றும் புதுச்சேரி தாவரவியல் பூங்காவிற்கு சொந்தமான மரங்களின் 2022 -23 வருடத்திற்கான மகசூல் அனுபவ உரிமத்திற்கான மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் தாவரவியல் பூங்கா மற்றும் மதகடிப்பட்டு அரசு பழத்தோட்டத்திற்கு தனித்தனியே வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளிகளை 18 ஜனவரி 2023 மாலை 5 மணி வரை தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்பிக்கலாம். பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 19 ஜனவரி 2023 காலை 10.30 மணியளவில் புதுச்சேரி தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் ஏல நிர்ணயக்குழு முன்னிலையில் பரிசீலனை செய்யப்படும். மேலும், திரையில் தோன்றும் http://agri.py.gov.in இணையதளம் வாயிலாக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணையதளத்திலும் ஒப்பந்த படிவங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
8.டாக்டர். மன்சுக் மாண்டவியா நாடு முழுவதும் உள்ள 9000க்கும் மேற்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்ரித்தி கேந்திராக்களில் (PMKSK) விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் காணோளி உரையாடல்
ரசாயனம் மற்றும் உரங்களுக்கான மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் உள்ள 9000க்கும் மேற்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்ரித்தி கேந்திராக்களில் (PMKSK) விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் உரையாடினார். "PMKSKக்கள் பண்ணை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு முக்கிய புள்ளியாக செயல்படும்; விவசாயிகள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான முக்கிய தளமாக இது விளங்கும்”. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சில்லறை விற்பனையாளர்களின் வழக்கமான திறனை வளர்ப்பதை உறுதி செய்யும் என்று டாக்டர். மன்சுக் மாண்டவியா கூறினார். “எங்கள் விவசாயிகளை ஆற்றல் மிக்கவர்களாக மாற்றுவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது; உலகளாவிய கொந்தளிப்பு இருந்தபோதிலும், அரசு அதிக மானிய விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது எனவும் அவர் அந்த கூட்டத்தில் குறிப்பிட்டார்.
9.MSP குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் பேச்சு
பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிலையான விலைக்கு உத்தரவாதம் அளிக்கும், ஆனால் எப்போதும் சிறந்த விலையாகது, சந்தையில் நியாயமான போட்டியின் மூலம் மட்டுமே இதை உறுதி செய்ய முடியும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். டிஜிட்டல் மீடியா தளமான ரூரல் வாய்ஸ் ஏற்பாடு செய்திருந்த விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். MSPயை சட்டப்பூர்வ உரிமையாக்க வேண்டும் என்ற உழவர் குழுக்களின் கோரிக்கையைப் பற்றிப் பேசிய சந்த், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற விரும்புவதாகவும், மேலும் தங்கள் விளைபொருட்களுக்கான விலையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் விரும்புவதாகக் குறிப்பிட்டார். "எனது பார்வையில், MSP நிச்சயமாக நிலையான விலை ஆனால் சிறந்த விலை அல்ல எனவும், சந்தையில் போட்டி இருந்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
10.வானிலை அறிக்கை:
தென்தமிழக மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும். வடதமிழக மாவட்டங்களில் காலை வேலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.
மேலும் படிக்க:
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இலவச இணைப்பு| தினை செயலாக்க அலகு நிறுவ விவசாயிகளுக்கு 35% மானியம்