அவசியம் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. புகை படங்களுக்கு லைக்ஸ் வாங்கிய நிலை மாரி போடும் வீடியோக்களுக்கு போல்லோவெர்ஸ் பெறுவதை இந்த சமூகம் முக்கிய வேலையாக பார்த்துக்கொண்டிருக்கிறது எனலாம். வீட்டில் தொடங்கி இன்று கோவில் முதல் சாவு வீடு வரை டிக்டாக் நம்மை அதற்கு அடிமையாகி உள்ளது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை டிக்டாக்கில் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. ஆரம்ப நிலையில் சினிமா காமெடி வசனங்கள் பேசி மக்களை ஈர்த்த இந்த டப்ஸ்மாஷ் பின் சினிமா பாடல்கள் பாடி மூசிகளி என்று தோற்றம் பெற்று இப்போது சொந்த குரல்களைக்கொண்டும் வீடியோ செய்து டிக்டாக் ஆகா உருமாறி உள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களை பின்தள்ளி இன்று டிக்டாக் முன்னிலை பெற்றுள்ளது. இதையே தங்கள் வாழ்க்கையாக்கி உள்ள மக்கள் காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை இதில் மூழ்கி உள்ளன. ஆரம்பத்தில் இதில் தங்கள் நடிப்பை, திறமையை காட்டி வந்தன, அனால் பனி புரியம் இடம், கல்லூரி,பள்ளிக்கூடம் வரை இது சென்று விட்டது. எந்த வித அச்சமும் இன்றி மாணவர்கள் வகுப்பறையிலேயே டிக்டாக் செய்கின்றன.மேலும் பெண்கள் இரட்டை அர்த்த வசனங்களையும், பாடல்களையும், எந்த வித கூச்சமும் இன்றி வெளியிடுகின்றன. இது வருங்காலத்தில் ஆபத்தாக அமையும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
பெண்களின் புகைப்படங்களை வைத்து மாபிங் செய்வது போல இந்த வீடியோக்களை ஆபாச தளங்களில் பதிவிடுவதாக செய்திகள் உள்ளன. பொழுது போக்குக்காக ஆரம்பித்த இந்த செயலை இன்று முழு நேர வேலையாக தங்களை மூழ்கடித்துக்கொண்டன. ப்ளூவேல் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம் போல டிக்டாக்கிலும் பல விபரீதம் ஏற்பட்டுள்ளன. தங்களையே மறந்து அதில் அடிமையாக்கி பின் தங்கள் வாழ்வை அளித்துக்கொள்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் கொண்டு இனி இருக்கும் வாழ்வில் எந்த வித ஆபத்தும் நேராமல் தங்கள் பிள்ளைகள் மீது கூடுத்துல கவனம் கொள்ள வேண்டும். பெண்கள் போடும் இத்தகைய ஆபாச வீடியோக்களால் சமூக சீர்கேடு உருவாகிறது. குழந்தைகளும் ஆண்களும் பார்க்கும் நிலையில் இவை போன்ற வீடியோக்கள் அவரகள் மனதில் நஞ்சை விதைப்பதாகும். டிக்டாக்கை தடை செய்ய அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே. வாழ்க்கையில் மக்கள் சாதிக்க ஏதேதோ இருக்கும் நிலையில் இத்தகைய ஆபத்தான செயல்களில் தங்களை மூழ்கடித்துக்கொள்ளாமல், வாழ்வில் முன்னேறுவதற்கான பாதையை தேடிச்செல்லுங்கள். எனவே வாழ்வில் திறமைகளை வெளிக்காட்ட எத்தனையோ வழிகள் இருக்கும் பட்சத்தில் இப்படி போன்ற ஆபத்தான வழிகளை தவிர்த்து பாதுகாப்பற்ற செய்லகளை செய்ய வேண்டாம், மேலும் வாழ்வை பாதுகாப்பக கொண்டுச்செல்ல செய்யும் செயலை யோசித்து பார்த்து செய்ய வேன்டும். நாற்றின் நிலையை மாற்ற கூடிய இந்த இளஞ் சமூகம் இப்படி போன்ற ஆபத்தான மற்றும் முகம் சுளிக்க வைக்கும் சமூக சீர்கேடான செயல்களை செய்யக்கூடாது என்பதும் வேண்டத்தக்கது.