தமிழகத்தில் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய, 20 ஆயிரம் மையங்களில் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாலை 6:20 மணி வரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 54 சதவீதம் பேருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில், ஓரிரு மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி இம்மாதம் 12ம் தேதி, 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு, 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்று பல்வேறு மையங்களில், பிற்பகலுக்குள் தடுப்பூசி காலியாகி விட்டது.
மெகா தடுப்பூசி முகாம்
தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிகம் முன்வருவதால், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என, 20 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாலை 4:30 மணி வரை 13.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
4 கோடியை தாண்டியது
இந்நிலையில் நேற்று வரை 3.96 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று காலை 11:30 மணியளவில் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Also Read | பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஞ்ஞானி எச்சரிக்கை
முதல்வர் ஆய்வு
சென்னையில், சைதாப்பேட்டை அருகே தடாக நகரில் சமுதாய கூடத்தில் நடக்கும் தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த குறிப்புகளை ஆய்வு செய்ததுடன், தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.
பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:தமிழகத்தில் 17 லட்சம் தடுப்பூசிகள் தான் கையிருப்பில் உள்ளன. அதனால், தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.மேலும், 15 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி வழங்கும்பட்சத்தில், மூன்று மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடியும். பொது மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க
எளிய வழிமுறை: கொரோனாவைக் கண்டறிய உப்புத் தண்ணீரே போதும்!
ஏறி இறங்கும் கொரோனாத் தொற்றால் சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகள்!