News

Monday, 14 March 2022 07:46 PM , by: R. Balakrishnan

Vaccine for 12 - 14 year olds

நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி (Vaccine)

60 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு நாளை மறுநாள் (மார்ச் 16) முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் 16 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு அபரிமிதமானது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், தவறாமல் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்‌.

மேலும் படிக்க

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவோவாக்ஸ்: 3ம் கட்ட சோதனைக்கு அனுமதி!

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்திய தேர்தல் கமிஷன் தயார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)