News

Friday, 29 July 2022 01:25 PM , by: Elavarse Sivakumar
மத்தியபிரதேசத்தில் ஒரே ஊசி (சிரஞ்சி) மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை ஊழியரின் இந்த அலட்சியப்போக்கைக் கண்டித்து, பெற்றோர் போராட்டம் நடத்தியதுடன், போலிஸில் வழக்குப்பதிவும் செய்தனர்.

அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், பாதிப்பில் நாம் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 45 நாள் இடைவெளியில் 2 தடுப்பூசிகளையும், ஒரு பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி முகாம்

இதன் ஒருபகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் சாகர் ரகரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், ஜித்தேந்திரா என்ற சுகாதார பணியாளர் 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்.
அதை கவனிக்க சில பெற்றோரும் வந்திருந்தனர்.

பெற்றோர் அதிர்ச்சி

அப்போது, தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர், ஒரே 'சிரிஞ்ச்' மூலம் அடுத்தடுத்து மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இப்படி 39 மாணவர்களுக்கு அவர் ஒரே 'சிரிஞ்ச்' மூலம் தடுப்பூசி செலுத்தியது தெரியவந்தது. பெற்றோரின் எதிர்ப்பை தொடர்ந்து அவர் தப்பிஓடி விட்டார். தகவல் அறிந்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கோஸ்வாமி, பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தார். அவரிடம் பெற்றோர் முறையிட்டனர்.

தப்பி ஓடிய ஊழியர் ஜிதேந்திர அகிர்வார் மீது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக கோபால்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட 39 மாணவர்களை சுகாதார அதிகாரிகள் பரிசோதித்தனர். 19 பேர் உடல்நிலை இயல்பாக உள்ளது. மீதி 20 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க...

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

விமானத்தில் பயணித்த பெற்றோர்- இன்ப அதிர்ச்சி அளித்த மகன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)