வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மரவள்ளி கிழங்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தாயரிப்பு குறித்த செயல்விளக்கப் பயிற்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு மரவள்ளிக் கிழங்கில் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து அறிந்துகொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மரவள்ளி சாகுபடியில் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி நேரடியாக அளிக்கப்பட்டது.
செயல் விளக்கம்
வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், நீர் மற்றும் நிலவள திட்டத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். திட்ட உதவி பேராசிரியர் ஸ்ரீவித்யா, மரவள்ளி சாகுபடியின் முக்கியத்துவம், மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் கரணை வெட்டும் இயந்திரம் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கினார்.
மதிப்புக்கூட்டுப் பொருட்கள்
மரவள்ளி கிழக்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிப்பது, அவற்றை சந்தைபடுத்துதல் குறித்தும் விளக்கினார். மரவள்ளியிலுள்ள, அனைத்து ரகங்களையும் சாகுபடி செய்து பயனடையும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற விவசாயிகளை, சேலம் மாவட்டத்திலுள்ள மரவள்ளி ஆராய்சி நிலையத்துக்கு நேரடியாக அழைத்துச்சென்று செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாணியாறு அணை பாசன விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மற்றும் செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த மரவள்ளி ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்து தேவையான தகவல்களை எப்போதும் தெரிந்துகொள்லாம். எனவும் வேளாண் அறிவியல் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!