வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பாக இந்திய ரயில்வேயில் இருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த மாதம் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் வழித்தடத்தையும் ரயில்வே முடிவு செய்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வழித்தட சோதனைக்குப் பிறகு, CRS (Commission of Railway Safety) அனுமதி எடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் ரயில் இயக்கப்படும்.
வந்தே பாரத் ரயில் (Vandhe Bharat)
இந்த வந்தே பாரத் ரயிலின் சோதனை செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை ஓட்டம் மும்பை - அகமதாபாத் இடையே நடைபெறும். வழித்தட சோதனையில், பயணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ற சுமையை வைத்து இந்த ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது, சில இருக்கைகளில் பணியாளர்கள் அமர்ந்து, மீதமுள்ள இருக்கைகள் சுமையை வைத்து ரயில் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் அதே வேகத்தில் இந்த ரயில் இயக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்குப் பிறகுதான் ரயில் ஓட்டத்துக்கான கால அட்டவணை தயாரிக்கப்படும். பண்டிகைக் காலத்தில் இந்த ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும். தற்போது இரண்டு ரயில்கள் (வழித்தடங்கள்) மட்டுமே மட்டுமே டெல்லியிலிருந்து மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிற்கும், டெல்லியிலிருந்து வாரணாசிக்கும் இயக்கப்படுகின்றன.
விரைவில் இது லக்னோ-பிரயாக்ராஜ்-கான்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 75 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்கத் திட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: இந்த தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!