சென்னை, ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை, சி.பி.ஆர் மையத்தில், நாளை (ஜூலை 24) வரை வீகன் திருவிழா நடக்கிறது. நடைபெறும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை. இதில் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீகன் திருவிழா (VEGAN Festival)
வீகன் என்பவர்கள் வெறும் உணவு மட்டுமல்லாமல், விலங்குகளைத் துன்புறுத்திப் பெறப்படும் எந்தப் பொருளையும் மறுப்பவர்கள். தோல், உரோமம், பட்டு, தந்தம், முத்து, கொம்பு, பல் மற்றும் நகம் உள்ளிட்ட அனைத்து விலங்கு வகைப் பொருட்களையும் பயன்படுத்த மாட்டார்கள்.
வீகன் திருவிழாவில் இறைச்சிக்கு இணையான தாவரத்திலிருந்து பெறப்படும் உணவு வகைகளை காட்சிப்படுத்துகிறார்கள். வீகனாக விரும்பும் அசைவர்களுக்கான கண்காட்சி இது. உணவுகள், உடைகள், காலணிகள், பணப்பை, இடுப்புப் பட்டை, கழுத்துப்பட்டி உள்ளிட்ட அனைத்தையும் காட்சிப் படுத்தியிருக்கின்றனர்.
இவ்விழாவைத் குந்த்தல் ஜோய்ஷர் என்பவர் தொடங்கி வைத்தார். இவர் இரண்டு முறை எவரெஸ்ட்டு சிகரத்திலேறிய வீகன் ஆவார். நீங்களும் இறைச்சியைத் தவிர்க்க நினைத்தால், வீகன் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
மானிய விலையில் கத்தரி, மிளகாய் செடிகள்: அரசு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு