புதுவையில் உள்ள மார்க்கெட்டுகளில் சேரும் காய்கறி கழிவுகளை (Vegetable waste) மாடுகளுக்கு உணவாக வழங்குவது போல், ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி (Kiranpedi) வலியுறுத்தி உள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், புதுவை மாநிலத்தில் பால் உற்பத்தி (Milk Production) அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
காய்கறி கழிவுகள்:
காய்கறி கழிவுகளை கிராமப்புறங்களில் மாடுகள் வளர்ப்பவர்கள், பயனடையும் வகையில் செயல்படுத்த வேண்டும். மாடு வளர்ப்பவர்களுக்கு மானியம் (Subsidy) வங்கி கணக்கில் நேரடியாக சென்று சேருவது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளின் உணவுத் தேவையை காய்கறி கழிவுகள் மூலம் தீர்த்து விட்டால், காய்கறி சந்தையில் தேவையற்ற குப்பைகள் சேர்வதைக் குறைக்கலாம். மேலும், சுற்றுப்புறத்தையும் (Environment) காக்க முடியும்.
தீவன செலவு குறைதல்:
காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு, தீவனமாக அளிப்பதன் மூலம் மாடு வளர்ப்பவர்களுக்கு தீவன செலவும் குறையும். காய்கறி கழிவுகளை, மாடு வளர்ப்பவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் கொஞ்சம் சவாலாக இருக்கும். தற்போதுள்ள வளர்ச்சியில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், மாடு வளர்ப்பவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமையும். காய்கறி கழிவுகளில் உள்ள சத்துக்கள் மாடுகளுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய விவசாயம்!
பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!