தீவனப்பயிர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தீவனப்பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகளை மானியத்தில் பெற விவசாயிகளுக்கு வேலூர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் (Tiruppur District) 3,050 ஏக்கர் பரப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவன அபிவிருத்தி திட்டத்தின் (Fodder Development Scheme) கீழ், பசுந்தீவனமாக பயன்படுத்தப்படும் கம்பு நேப்பியர், சோளம், மக்காச்சோளம், தட்டை பயறு, வேலிமசால் போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.
தீவனப்பயிர் சாகுபடிக்கு மானியம்
குறைந்தது, 10 சென்ட் முதல், ஒரு ஏக்கர் வரை சாகுபடி செய்ய, 320 ரூபாய் மானியம் வழங்கப்படும், அதிகபட்சம், 200 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படும். மானாவாரி நிலத்தில், தீவன சோளம் மற்றும் தட்டை பயறு சாகுபடி செய்ய, 100 சதவீத மானியத்தில், 2,500 ஏக்கருக்கு விதை வழங்கப்படும். குறைந்தபட்சம், 25 சென்ட் முதல், இரண்டு ஏக்கர் வரை, மானியம் கிடைக்கும். 25 சென்ட்டுக்கு, மூன்று கிலோ சோளம் மற்றும் ஒரு கிலோ தட்டை பயறு விதை வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு, 12 கிலோ சோளம் மற்றும் நான்கு கிலோ தட்டை விதை வழங்கப்படும்.
பசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கால்நடை துறை
அதேபோன்று, 75 சதவீத மானியத்தில், புல் நறுக்கும் கருவி, கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மூலம், மானியத்தில் விதை உற்பத்தி செய்யவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்? - Who can apply
மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெறுவோர், குறைந்தது, இரண்டு அல்லது மூன்று கால்நடைகள் வளர்க்கும் விவசாயியாக இருக்க வேண்டும். விவசாயி, நீர்ப்பாசனவசதி அல்லது மானாவாரி நிலம் வைத்திருக்க வேண்டும்; தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு தீவனபயிர் சாகுபடி செய்ய வேண்டும். ஏற்கனவே இத்திட்டத்தில் பயனடைந்தவராக இருக்க கூடாது. தகுதியான விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம்.
வேலூரில் விவசாயிகளுக்கு அழைப்பு - Call for Vellore Farmers
வேலூர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஜெ.நவநீதகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இறவை சாகுபடிக்கு நீர்ப்பாசன வசதி கொண்ட 4,000 விவசாயிகளுக்கு மொத்தம் 1,000 ஏக்கருக்கு தலா 2 விதமான விதைகள் வழங்கப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
கால்நடைகளுக்கான அவசர முதலுதவி சிகிச்சை முறைகள்!
தீவனபயிர் மானிய விவரம்
இவற்றில், ஒரு விவசாயிக்கு கால் ஏக்கர் பரப்பளவுக்குத் தேவையான கோஎஃப்எஸ் 29 தீவனச்சோளம் 375 கிராம், வேலி மசால் 500 கிராம் இலவசமாக வழங்கப்படும்.
நிலையான பசுந்தீவன உற்பத்திக்கு ஒரு விவசாயிக்கு 10 சென்ட் வீதம் கம்பு நேப்பியர் குச்சிகள் 650, கோஎஃப்எஸ் 29 தீவனச்சோளம் 200 கிராம், தீவன மக்காசோளம் 160 கிராம், தீவன காரமணி 120 கிராம், வேலி மசால் 120 கிராம் என 1,600 விவசாயிகளுக்கு மொத்தம் 450 ஏக்கருக்கு வழங்கப்பட உள்ளது.
சுற்றியுள்ள பாத்திகளுக்காக அகத்தி, முருங்கை, வேம்பு, சூபாவுல் ஆகிய மரக்கன்று விதைகளும் வழங்கப்பட உள்ளன. மானாவாரி நிலங்களில் தீவனப்பயிர் உற்பத்திக்கு மொத்தம் 5,000 ஏக்கருக்கு, 20,000 பயனாளிகளுக்கு விதைகள் வழங்கப்பட உள்ளன. இதில், தலா ஒரு விவசாயிக்கு தீவன காராமணி ஒரு கிலோ, தீவன சோளம் 3 கிலோ வழங்கப்படும். மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய பயிர்கள் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.16,750 வீதம் 36 ஏக்கருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டதின் மூலம், மூலம் நூறு நாள் வேலைத் திட்டம், தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி அமைப்புகள் மரக்கன்றுகளை நடவு செய்யலாம். தலா ரூ.20,000 மதிப்புடைய புல் நறுக்கும் கருவி 200 பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
இத்திட்டப் பயன்களை பெற தகுதியுடைய விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
Read This also
நல்ல சத்தான கோழி வளர்ப்பு - அருமையான தீவனங்கள்!
''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!